சாவித்திரி மாமிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. பெற்ற மகன் போனதைவிட, தனது ஆத்துக்காரர் தன் மாட்டுபொன்னிடம் நடந்து கொண்ட விதம் தான் இந்த துக்கத்துக்கு காரணம். "பெற்ற மகன் ஹரிஷ் 27 வயதில், கல்யாணமான இரண்டே வருடங்களுக்குள் எதிர்பாராத விபத்தில் இறந்ததும் இவருக்கு பித்து பிடித்து விட்டதோ? அவன் இறந்த அன்று கூட சௌம்யாவுக்கு ஆறுதலா தானே பேசி கொண்டிருந்தார்? பிள்ளை போன பின்பு வயதான காலத்தில் இவளை தானே பார்த்துண்டு ஆறுதல் படனும்?" என்று எண்ணி கொண்டு அழுதாள்.
தனது ஓரே மகனின் மனைவி என்பதை விட சாவித்திரி மாமிக்கு சௌம்யா ஒரு நல்ல தோழி, நல்ல மகள். நல்ல வருமானம் தந்த வேலையை விட்டுவிட்டு, வியாதியால் அவதி பட்ட சாவித்திரி மாமியை பார்துகொள்வதர்க்காக வீட்டிலியே இருந்து விட்டாள். மாமவும் அன்புடன் தான் இருந்தார். விளையாட்டாக சண்டை வந்தாலும் மாமா எப்பொழுதும் சொவ்ம்யாவுக்குதான் பரிந்து கொண்டு வருவார்.
ஹரிஷின் பதினாறாவது நாள் காரியங்கள் எல்லாம் முடித்து விட்டு சௌம்யாவை பெற்றவர்கள் கிளம்பும்போது தான் மாமா அந்த குண்டை போட்டார்... நடு கூடத்தில் நின்று கொண்டு சம்பந்தியிடம், "சௌம்யாவையும் ஒங்காதுக்கு கூட்டிண்டு போங்கோ" என்று கடுமையாக சொன்னார். சௌம்யாவின் அப்பாவோ, "இல்ல சம்பந்தி, அவ இங்கேயே ஒங்களுக்கு துணையா இருப்பா" என்றார். "ஒன்னும் வேண்டாம். அந்த மகராசி இந்தாத்துல கால வச்ச நேரம் என் ஆத்துக்காரி சீக்கு வந்து படுத்துட்டா. இப்போ என் ஒரே பிள்ளையையும் முழுங்கிட்டா. அவள முதல்ல என்கதுலேர்ந்து கூட்டிண்டு போங்கோ. எங்கள நாங்களே பார்த்துக்கறோம்" என்றார். எல்லாருக்கும் அதிர்ச்சி. சௌம்யா இதை கேட்டவுடன் துடித்து விட்டாள். அப்புறம் நடந்ததை நினைக்க கூடமுடியவில்லை. எல்லோரும் கரித்து கொட்டிவிட்டு சென்றார்கள். எல்லோர் முன்னிலும் அவரை எதுவும் சொல்ல முடியாமல் போன மாமி அழுது கதறி மருமகளை அனுப்பி வைத்தார்.
எல்லோரும் சென்ற பின்பு கூடத்தில் ஜன்னல் அருகில் அமர்திருந்த மாமாவை தேம்பி கொண்டே மாமி மெதுவாக நெருங்கி ஞாயம் கேட்டார். "பெற்ற தாயை விட கனிவா நம்மள பர்த்துன்றுந்த சௌம்யாவ எப்படி கரிச்சு கொட்ட ஒங்களுக்கு மனசு வந்தது? இப்படி ஒரு கல்நெஞ்ச காரரோடவ நான் இத்தன வருஷம் குடும்பம் நடதிருக்கேன்" என்றாள். தலை குனிந்து அமர்ந்திருந்த மாமா குலுங்கி குலுங்கி அழுதார்.
கண்ணில் விழிந்த நீரை துடைத்து கொண்டு," இன்னிக்கு காத்தால காரியத்துக்கு வந்திருந்த சொவ்ம்யவோட தோழி, 'இனிமே என்ன பண்ண போறே, மனச திட படுத்திண்டு வேற ஒரு வாழ்க்கையை அமச்சுகோ' என்றாள். அதுக்கு சௌம்யா, 'பெற்ற தாய்தந்தை போல அன்பா இருக்கற மாமா, மாமிய பார்த்துண்டு நான் இப்படியே இருந்துட போறேன்' அப்படின்னா. என்னால தாங்க முடியல. நமக்கு என்ன சாவி, காடு வாங்கரது, வீடு பொங்கறது. நம்மளோடே ஒரு பந்தத்தை வச்சுண்டு அந்த இளம்தளிர் ஏன் தன்னோட வாழ்க்கைய கெடுதுக்கனம். நம்ம பிள்ளைக்கு தான் அல்ப ஆயுசா போய்டுது. அவளாவது நன்னா இருக்கட்டுமே", என்றார். சாவித்திரி மாமி இப்போது முன்னை விட அதிகமாய் அழுதார்.
No comments:
Post a Comment